எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தற்போது மதிப்பிடப்பட்டுள்ள தொகையை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
யட்டியாந்தோட்டை பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலுக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.
கடந்த மாதம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரையான காலப்பகுதியில் 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
இந்தநிலையில், தேர்தலுக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்’’ என நிதி இராஜாங்க குறிப்பிட்டுள்ளார்.