Home இலங்கை சமூகம் புலமைப்பரிசில் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

0

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் (Grade 05 Scholarship Exam) தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் (Department of Examination) மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இணைந்து மேற்கொண்டு வரும் விசாரணைகள் நிறைவடைந்தவுடன் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் சில வினாக்களுடன் கூடிய மாதிரி வினாத்தாள் அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரினால் வெளியிடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பரீட்சை திணைக்களம்

இதன்படி, வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன், குறித்த 03 கேள்விகளை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் கடந்த 17ஆம் திகதி தீர்மானித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (18) காலை பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பிரிவை வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பின்னர் ஆறு பெற்றோர்கள் பரீட்சை ஆணையாளருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

பரீட்சை ஆணையாளர் நாயகம்

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara), 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவது அவசியமானால் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பெற விண்ணப்பித்த மாணவர்களின் பெற்றோர்கள் குழுவும் இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version