Home இலங்கை சமூகம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த விவகாரம் தொடர்பிலான விரிவான விசாரணை அறிக்கையை நாளை(19) காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் ஏற்கனவே கசிந்ததாகவும், எனவே குறித்த பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடுமாறு கோரி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நான்கு அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று(18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version