Home இலங்கை கல்வி முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதி : கல்வி அமைச்சின் அறிவித்தல்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதி : கல்வி அமைச்சின் அறிவித்தல்

0

2025 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ளது.

அதன்படி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான சேர்க்கை ஜனவரி 30 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கற்றல் செயற்பாடுகள்

அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி முதல் முதல் மார்ச் மாதம் 14ம் திகதி வரை முதற் கட்டமும், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை இரண்டாம் கட்டமும், ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் மே மாதம் 9ம் திகதி வரை மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/grade-1-students-admission-eduacation-ministry-1735624061

NO COMMENTS

Exit mobile version