Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

0

2024ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதாவது, பரீட்சையன்று ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி நடத்தித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை நடத்துவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

வெளியான அறிவிப்பு

பரீட்சையானது 2 ,849 பரீட்சை நிலையங்களில் காலை 9.30 முதல் பிற்பகல் 12.15 வரை இடம்பெறவுள்ளது.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் இன்று (11) நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களை அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version