Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

இந்த நிலையில் பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [https://onlineexams.gov.lk] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற நிலையில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இம்மாதம் 02ஆம் திகதி வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108

NO COMMENTS

Exit mobile version