2026 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ளார்.
பரீட்சை ஏற்பாடுகள்
ஊடக சந்திப்பொன்றில் அவர், திட்டமிட்டபடி பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பரீ்டசைக்கான விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு மார்ச் 30 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-on-august-9th-1782306362
