Home இலங்கை கல்வி நிறுத்தப்படுமா புலமைப்பரிசில் பரீட்சை – தீவிர ஆலோசனையில் அரசு

நிறுத்தப்படுமா புலமைப்பரிசில் பரீட்சை – தீவிர ஆலோசனையில் அரசு

0

2026ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பரீட்சை 10 வயது சிறுவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது.

இது பல வீடுகளில் ‘பெற்றோர்களுக்கான பரீட்சையாக’ மாறி, பிள்ளைகளை அதிக நேர வகுப்புகளில் ஈடுபட வைப்பதாகக் கூறப்படுகிறது

இதனால், கல்வி அமைச்சு மற்றும் அரசாங்கம் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் மாற்று முறைகளை ஆராய்ந்து வருகிறது.

2028-ல் ஆய்வு செய்யப்பட்டு, 2029 அல்லது 2030-ல் கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரீட்சையை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, அதன் அணுகுமுறையை மாற்றி, மேலதிக வகுப்புகளின் சுமையைக் குறைப்பதும், மாணவர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

பரீட்சை முடிவுகளைக் காரணம் காட்டி பிள்ளைகளை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தும் பெற்றோர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி… 

Source: https://tamilwin.com/article/scholarship-exam-results-2026-1788474918

NO COMMENTS

Exit mobile version