Home இலங்கை சமூகம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

இந்த ஆண்டுக்கான(2024) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி வரை மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்ட சம்பவத்தையடுத்து பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனு மீதான விசாரணை

இந்நிலையில், இந்த மனு எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம்(11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் விசாரணையை ஒத்திவைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version