தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026) நாடளாவிய ரீதியில் 2,723 நிலையங்களில் இடம்பெற்றுள்ளன.
பரீட்சைக்கு அமரத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 294,089 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆரம்பமாகவுள்ள பரீட்சை
இதற்கிடையில், ஜி.சி.இ. உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி செப்டம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,532 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குச் செல்வதற்கு முன்னர் அனுமதி அட்டையில் கையொப்பம் சான்றளிக்கப்பட வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தினார்.
Source: https://tamilwin.com/article/grade-5-scholarship-results-expected-1786265608
