Home இலங்கை சமூகம் அம்பாறையில் வேலைவாய்ப்பு கோரி பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறையில் வேலைவாய்ப்பு கோரி பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

0

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டமானது இன்று (01) அம்பாறை மாவட்டம் காரைதீவு
சந்திக்கு அருகாமையில் ஆரம்பமானது.

இதன்போது பட்டதாரிகள் கறுப்பு பட்டி அணிந்து பல்வேறு
சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை
அமைதியாக முன்னெடுத்தனர்.

கவனயீர்ப்பு போராட்டம்

இந்த கவனயீர்ப்பு போராட்டமானது
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உதுமாலெப்பை முகமது
முஹ்சீன் தலைமையில் இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்ட வேலையற்ற பட்டதாரிகள், “அழிக்காதே
அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே“, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு
முன்னேறுவது எவ்வாறு“, “பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்“ போன்ற
பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு
கோசங்களையும் எழுப்பியவாறு உரிய தரப்பினர் தீர்வினை பெற்றுத் தருமாறு வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை
விடுத்தனர்.

பட்டதாரிகளின் நிலைமை

இதேவேளை தனது தாய்க்கு வேலை வாய்ப்பு கோரி சிறுமி ஒருவர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை“, “ ஜனாதிபதி வேட்பாளர்கள் என கூறிக்கொள்வோர் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தனர்

மேலும், குறித்த போராட்டம் இடம்பெற்ற போது காவல்துறையினர் பாதுகாப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version