Home இலங்கை சமூகம் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்திய கிராம அலுவலரி்ன் செயற்பாடு

போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்திய கிராம அலுவலரி்ன் செயற்பாடு

0

கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவர் தான்
அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர விடுவதற்காக மேற்கொண்ட செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறு

இதன்மூலம் அவர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியமையால் அவசர நோயாளி ஒருவரை
வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்க வேண்டிய நிலை
ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுத் தேவைகளுக்கு செல்வதிலும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு
செல்வதிலும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version