Home இலங்கை சமூகம் தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் கிராம சேவகர்கள்

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் கிராம சேவகர்கள்

0

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பெண் கிராம உத்தியோகத்தர்களும் சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (14.03.2025) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் 

இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் சாமலி வத்சலா குலதுங்க தெரிவிக்கையில், பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களை மூடுவதற்கும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரவு நேர முறைமைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் (Saroja Savithri Paulraj) தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

you may like this


https://www.youtube.com/embed/TkAs5dym8C8

NO COMMENTS

Exit mobile version