யாழ். நல்லூரில் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபட்ட தந்தையின் பின்
அவரது மகன் பக்தியுடன் நடந்து வந்த நெகிழ்ச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று
வருகின்றது.
நெகிழ்ச்சி சம்பவம்
இந்தநிலையில், ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும்
வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை மற்றும் அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில்
ஈடுபடுவது வழமையாக இருக்கின்றது.
இதன்தொடர்ச்சியாக நேற்றையதினம் (12) தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது
அவரது மகனான சிறுவன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது பார்ப்போரை
நெகிழ்ச்சியுடன் மெய்சிலிர்க்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா
https://www.youtube.com/embed/dEd6SAd5RZY
