Home இலங்கை குற்றம் வீடொன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தம்பதி : பேரனின் வெறிச்செயல்

வீடொன்றுக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தம்பதி : பேரனின் வெறிச்செயல்

0

புத்தளம், சாலியவெவ பகுதியில் உள்ள வீட்டில் தனது பாட்டி மற்றும் தாத்தாவை பேரன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொலை குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை 

நேற்றைய தினம் தம்பதியினர், அவர்கள்  வசித்த வீட்டிற்குள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

 

பொலிஸாரின் விசாரணைகளில் உயிரிழந்தவர்கள் 80 வயதான தாத்தா மற்றும் 76 வயதான பாட்டி என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/grand-parent-killed-by-grandson-in-sri-lanka-1744510827

NO COMMENTS

Exit mobile version