கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ரிவால்வர் துப்பாக்கி
சம்பவத்தில் உயிரிழந்த நபர், களனியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் துப்பாக்கிச் சூட்டுக்கு ரிவால்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சந்தேக நபர்களைக் கைது செய்ய கிராண்ட்பாஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
