Home முக்கியச் செய்திகள் யாழ். தையிட்டியில் மக்கள் போராட்டம் : பெருகும் ஆதரவு

யாழ். தையிட்டியில் மக்கள் போராட்டம் : பெருகும் ஆதரவு

0

யாழ்ப்பாணம்(Jaffna) –  தையிட்டியில் திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்களின் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தையிட்டி பகுதியில் உள்ள சுமார் 7 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி எவ்வித அனுமதிகளும் இன்றி சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை எனும் விகாரை கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் இருந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியேறியிருந்தனர். பின்னர் அப்பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

போர் நிறைவடைந்த நிலையில் மக்கள் மீள்குடியேற, இராணுவத்தினர் கட்டம் கட்டமாக அனுமதித்தனர். அவ்வேளை தற்போது விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள சுமார் 14 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

இந்தப்பகுதியில் எவ்வித அனுமதிகளும் இன்றி. யாழ் மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் விகாரையின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி அப்பகுதிகளை மக்களிடம் மீள ஒப்படைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காணிகள் மீள கையளிக்கப்படாது இராணுவத்தினரின் உதவியுடன் விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றும் நாளையும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

YOU MAY LIKE THIS 


 

https://www.youtube.com/embed/Wsy488Xuyn4https://www.youtube.com/embed/YF5OwWigEaE

NO COMMENTS

Exit mobile version