Home முக்கியச் செய்திகள் இலங்கையில் சடுதியாக அதிகரித்த போஞ்சி விலை

இலங்கையில் சடுதியாக அதிகரித்த போஞ்சி விலை

0

இலங்கையில் (Sri Lanka) தற்போது மரக்கறிகளின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் போஞ்சி 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஞ்சியின் விலை

அத்தோடு, ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோகிராம் கரட் மற்றும் லீக்ஸின் விலை 600 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் 1000 ரூபா வரையில் சடுதியாக அதிகரித்துள்ள போஞ்சியின் விலை மக்களுக்கு வியப்பளிப்பதுடன் மரக்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு சுமையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/green-beans-price-in-sri-lanka-1718678126?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version