Home முக்கியச் செய்திகள் பெண் வைத்தியர் வன்கொடுமை விவகாரம் : சந்தேக நபர் வீட்டில் மீட்கப்பட்ட கைக்குண்டு

பெண் வைத்தியர் வன்கொடுமை விவகாரம் : சந்தேக நபர் வீட்டில் மீட்கப்பட்ட கைக்குண்டு

0

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Anuradhapura Teaching Hospital) பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை கல்னேவ காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் வைத்தியரின் தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டறியும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

நீதிமன்றத்தில் முன்னிலை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு (12) அனுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து நேற்று (13) அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ​​அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை பெண் வைத்தியருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/S7XQWiQqoJk

NO COMMENTS

Exit mobile version