Home இலங்கை குற்றம் வீடொன்றுக்குள் சிறை வைக்கப்பட்ட குடும்பம் : பல மில்லியன் ரூபா கொள்ளை

வீடொன்றுக்குள் சிறை வைக்கப்பட்ட குடும்பம் : பல மில்லியன் ரூபா கொள்ளை

0

புத்தளத்தில் வீடொன்றுக்குள் குடும்பம் ஒன்று சிறை வைக்கப்பட்ட நிலையில் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பொலிஸ் வேடமணிந்த குழுவொன்று புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

நாவக்காடு பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

ஈரான் மண்ணில் இஸ்ரேலிய ‘மொசாட்’ மேற்கொண்ட கொலைத் தாக்குதல் பட்டியல்

தங்க நகை, பணம் கொள்ளை

இதன்போது தங்க ஆபரணங்கள், கையடக்கப் பணம் உள்ளிட்ட 90 இலட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த குடும்பத்தினர் அடைத்து வைத்து அவர்கள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தின் போது வர்த்தகர், அவரது மனைவி, தாய் மற்றும் வர்த்தகரின் மகள்கள் மூவர் வீட்டில் இருந்துள்ளனர்.

இதுவரை சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2023-2024 பெரும்போகத்தில் 71 சதவீத பயிர்ச்செய்கை நிலங்கள் சேதம்

சமூக வலைத்தளங்கள் மூலமாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version