Home இலங்கை அரசியல் சுயேச்சை எம்.பி இடுப்பில் என்ன! துப்பாக்கியா – பெப்பர் ஸ்பிறேயா

சுயேச்சை எம்.பி இடுப்பில் என்ன! துப்பாக்கியா – பெப்பர் ஸ்பிறேயா

0

இந்திய வெளியுறவு அமைச்சரின் நேற்றைய கொழும்பு பயணத்தில் பரவலான உற்றுநோக்கல் இருந்தாலும்; வடக்கில் இருந்து வெளியான வாதபிரதிவாத காணொளியில் சுயேச்சையின் திட்டமிட்ட கவன குவியம் வெளிப்பட்டது.

பிரதேசசபையின் சில பெண் உறுப்பினர்களை மையப்படுத்தி நேற்று இந்த வீரம் வெளிப்பட்டு சில மணிநேரத்தில் கொழும்பு நீதிமன்றத்தின் பிடியாணையால் இன்று கொழும்பில் சரணடைவு பம்மலான வெளிப்பட்டது.

இதற்கிடேயே சுயேச்சை எம்.பின் உப்பிய இடுப்பு பகுதி சட்டைக்குள் இருந்த கைத்துப்பாக்கியா அல்லது பெப்பர் ஸ்பிறேயா(மிளகு தெளிப்பான்) அது என்ன என்ன என்ற கே.பி சுந்தராம்பாள் பாணி வினாக்களும் எழுந்திருந்தன.

தனக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதி கிடைக்காததால் தனது பாதுகாப்பிற்காக எப்போதும் தனது வாகனத்தில் ஒரு வாளை எடுத்துச் செல்வதாக சுயேச்சையார் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் நேற்று அவரது இடுப்புபகுதியில் ஏதோ ஒரு சாதனம் இருப்பதற்கு ஆதாரமாக அவரது சட்டைப்பகுதி துருத்தியபடி நின்றமை ஊடக கமராக்களில் தெரிந்த நிலையில் இந்த விடயங்கள் மற்றும் இந்திய அமைச்சரின் கொழும்பு பயணம் குறித்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…

https://www.youtube.com/embed/qwh8nkAtrOc

NO COMMENTS

Exit mobile version