Home இலங்கை குற்றம் யாழ். பல்கலை வளாகத்தில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு : விசாரணைகள் தீவிரம்

யாழ். பல்கலை வளாகத்தில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு : விசாரணைகள் தீவிரம்

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் வயர்களும் அடையாளம்
காணப்பட்டுள்ளன.

நேற்றையதினம் பல்கலைக்கழக நூலக பகுதியை சுத்தம் செய்தவேளை குறித்த பொருட்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை

இதனையடுத்து பல்கலைக்கழக
நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து
அங்கு நேற்று இரவு
முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்
படையினர் அந்த துப்பாக்கி பாகங்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்றுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version