கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று தவறுதலாக இயங்கியதில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில் விசேட விருந்தினர் பகுதியான “VIP Lounge Gold Route” முனைய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, விமான நிலைய முனையமொன்றின் உட்கூரையில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
மற்றுமொரு விமான சேவை ஆரம்பம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்
துப்பாக்கிச் சூடு
சம்பவத்தில் விமானப்படை வீரரின் கையிலிருந்த T-56 ரக துப்பாக்கியே தவறுதலாக செயற்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
உலகின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் நபர்கள் இந்த முனையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் – செங்கடல்களில் தாக்கப்பட்ட நான்கு கப்பல்கள்: அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
மேலதிக விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில், குறித்த விமானப்படை வீரர், இலங்கை விமானப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை பிரிவினர் மற்றும் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பில் போதை பொருட்களுடன் சிக்கிய இருவர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |