Home இலங்கை சமூகம் மகிந்தானந்த அளுத்கமகே – குணதிலக்க ராஜபக்ச இடையே சட்டப்போராக மாறும் தாக்குதல் விவகாரம்

மகிந்தானந்த அளுத்கமகே – குணதிலக்க ராஜபக்ச இடையே சட்டப்போராக மாறும் தாக்குதல் விவகாரம்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) மற்றும் குணதிலக்க ராஜபக்சவுக்கு(Gunathilak Rajapaks) இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கைகலப்பு, தற்போது சட்டப் போராக மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர், மகிந்தானந்த , தனது சகாவுக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

இதன் முதல் கட்டமாக, தமக்கு எதிராக பொய்யான தாக்குதல் குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்சவுக்கு, சட்டக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே தனது சட்டத்தரணிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர்களிடம் வாக்குமூலம்

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் உள்ளனர். இதன்படி ஐந்து இராஜாங்க அமைச்சர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும், அவற்றை தமது அவதூறு வழக்குக்கு பயன்படுத்தபோவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சவுடன் தான் வாய்மொழி சண்டையிலேயே ஈடுபட்டதாகவும் அளுத்கமகே உறுப்பினர் கூறியுள்ளார் 

ராஜபக்ச ஆக்ரோஷமான முறையில் கூச்சலிட்டார், அவர் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தாம் அவருடன் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2024,ஜுன் 3, அன்று ஜனாதிபதி செயலகத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

NO COMMENTS

Exit mobile version