Home இலங்கை குற்றம் கணேமுல்ல சஞ்சீவவின் சீடரால் நத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி

கணேமுல்ல சஞ்சீவவின் சீடரால் நத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி

0

நீர்கொழும்பு பகுதியில் இன்று (21) பிற்பகல் கணேமுல்ல சஞ்சீவவின் சீடர் ஒருவரால் மற்றொரு துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடை பொல பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையின் உரிமையாளர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

சஞ்சீவவின் சீடர்  

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மிரிஸ் அந்தோணி என்பவரின் மூத்த மகனை குறிவைத்து தாக்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதும் துப்பாக்கி இயங்கவில்லை என்ற நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது. 

கணேமுல்ல சஞ்சீவவின், கீழுள்ள கமாண்டோ சலிந்த என்ற நபர், குறித்த வர்த்தக நிலையத்தில் கப்பம் கோரி பணம் கேட்டதாகவும், பணம் செலுத்தப்படாத நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version