Home இலங்கை சமூகம் பெண்ணாகத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஆணாக மாறிய சுற்றுலாப் பயணி

பெண்ணாகத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஆணாக மாறிய சுற்றுலாப் பயணி

0

அறுகம்பை பிரதேசத்தில் அநாகரீமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவராக கருதப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணி ஒரு ஆண் என்ற பரபரப்பான உண்மை வெளிப்பட்டுள்ளது.

பொத்துவில்- அறுகம்பை பிரதேசத்தில் மேலாடையின்றி மார்பகங்களை காட்சிப்படுத்தி பொதுவெளியில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் தாய்லாந்து சுற்றுலாப் பயணியொருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பொத்துவில் பொலிசாரின் முறைப்பாட்டின் பேரில் பொத்துவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குறித்த தண்டனையை விதித்திருந்தது.

தண்டனை

இந்நிலையில் குறித்த சுற்றுலாப் பயணி ஒரு பெண்ணாக கருதப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டாலும், உண்மையில் அவர் ஒரு ஆண் என்ற பரபரப்பான உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது.

அவரது கடவுச்சீட்டில் பெயருக்கு முன்னால் ஆண்களைக் குறிக்கப் பயன்படுத்தும் மிஸ்டர் அடைமொழியும் பால் எனுமிடத்தில் ஆண்களைக் குறிக்க பயன்படுத்தும் எம் எழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்கள் மேலாடையின்றி பொது இடங்களில் நடமாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமல்ல எனும் நிலையில் தற்போது குறித்த சுற்றுலாப் பயணிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version