Home இலங்கை குற்றம் பல நடிகைகளுக்கு ஆபத்து – கெஹல்பத்தரவுடன் சிக்கிய பியூமி

பல நடிகைகளுக்கு ஆபத்து – கெஹல்பத்தரவுடன் சிக்கிய பியூமி

0

தற்போது பொலிஸ் காவலில் உள்ள ஒரு குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவுடனான உறவு குறித்து நடிகை பியூமி ஹன்சமாலியிடம் விசாரணை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியூமி ஹன்சமாலி நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

சிக்கிய பியூமி 

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவரது வாக்குமூலங்களை பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த மேலும் பல மொடல் துறையில் இருந்தவர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மேலும் பல மொடல்கள் மற்றும் நடிகைகளிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version