Home இலங்கை சமூகம் வாய் திறக்கும் முக்கிய குற்றவாளி: டிரான் – தேசபந்து குறித்து வெளியான தகவல்

வாய் திறக்கும் முக்கிய குற்றவாளி: டிரான் – தேசபந்து குறித்து வெளியான தகவல்

0

பாதாள உலகக் குழுவின் முக்கிய குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கோரியதாகக் கூறப்படும் ரூ. 300 மில்லியன் லஞ்சத்தை கொடுக்க மறுத்ததன் விளைவாகவே தங்காலையில் தன்னை தடுத்து வைத்துள்ளதாக ஹரக் கட்டா அதன்போது கூறியுள்ளார்.

நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து ஹரக் கட்டாவை காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது இன்று (14) இந்தக் கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டன.

குற்றச்சாட்டுகள்

செய்தியாளர்களிடம் சுருக்கமாகப் பேசிய அவர், மீண்டும் காவலில் எடுப்பதற்கு முன்பு, “சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றை நான் பின்னர் வெளிப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.

அத்துடன், தங்காலையில் தொடர்ந்து தன்னை தடுத்து வைக்கப்படுவதற்கு மாதத்திற்கு ரூ. 10 மில்லியன் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்க அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

https://www.youtube.com/embed/aAhC9BBCnGo

NO COMMENTS

Exit mobile version