Home விளையாட்டு ரோகித் – விராட் கோலி சிறந்த உடற்றகுதியுடன் காணப்படுகின்றனர்: ஹர்பஜன் சிங்

ரோகித் – விராட் கோலி சிறந்த உடற்றகுதியுடன் காணப்படுகின்றனர்: ஹர்பஜன் சிங்

0

இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் சிறந்த உடற்றகுதியுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இன்னும் இரண்டு ஆண்டுகள் ரோஹித் எளிதாக விளையாட முடியும். விராட் கோலியின் உடற்தகுதி பற்றி உங்களுக்குத் தெரியாது.

ஐந்து ஆண்டுகள்

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் அவரால் விளையாட முடியும். விராட் கோலி இந்திய கிரிக்கெட்ட அணியின் மிகச்சிறந்த உடற்றகுதி மற்றும் உடல் பலம் மிக்க வீரர்.

ரோகித் மற்றும் கோலி இருவரும் விளையாட இன்னும் அதிக போட்டிகள் எஞ்சியுள்ளன. எனவே அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.

எவ்வாறாயினும் அனைத்தும் அவர்களின் முடிவு தான்” என ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version