Home விளையாட்டு இந்திய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மீது முறைப்பாடு

இந்திய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மீது முறைப்பாடு

0

இந்திய (India) முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நால்வர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த முறைப்பாட்டை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையம் (NCPEDP) அளித்துள்ளது.

நடைபெற்று முடிந்த சிரேஸ்ட கிரிக்கெட் வீரர்களுக்கான உலக சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது.

முன்னாள் வீரர்கள்

இதனை தொடர்ந்து, இந்திய முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) , சுரேஷ் ரெய்னா (Suresh Raina), யுவராஜ் சிங் (Yuvraj Singh) , குர்கீரத் மான் (Gurkeerat Mann Singh) ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்று கேலி செய்து இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் காணொளி பதிவேற்றியிருந்தனர்

இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் செயல் இயக்குனர் அர்மான் அலி அமர் காலனி காவல் நிலையத்தில் இவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மெட்டா இந்தியா

இந்த முறைப்பாட்டில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி, இதுபோன்ற காணொளியை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததற்காக மெட்டா இந்தியா (Meta India) நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதனும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இந்த காணொளி குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் (X) பதிவில் அறிக்கையை வெளியிட்டு அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version