Home இலங்கை அரசியல் கோப் குழுவில் அம்பலமான அரசாங்க நிலங்கள் ஒதுக்கீடு மோசடி!

கோப் குழுவில் அம்பலமான அரசாங்க நிலங்கள் ஒதுக்கீடு மோசடி!

0

அரசியல் அதிகாரங்களின் தேவைக்கேற்ப அரசாங்க நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கோப் குழுவின் விசாரணைகளில் பல்வேறு மோசடிகள் அம்பலமாகியுள்ளன.

குறித்த துறைக்கு ஹரின் பெர்னாண்டோ அமைச்சராக இருந்தபோது அரசாங்க நிலங்கள் சம்பந்தப்பட்ட ஏராளமான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இது நில விற்பனை வடிவத்தில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தயாசிறி ஜெயசேகர

கோப் குழுவில் குறித்த மோசடி வெளிப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும் தொடர்புடைய பிரச்சினைகளை எழுப்பி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி காலி – கல்லின்தவத்த பகுதியில் உள்ள நில சீர்திருத்த ஆணையத்திற்குச் சொந்தமான 175 ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கர் உட்பட நிலத் துண்டுகள் ஒதுக்கப்பட்டமை தொடர்பார விபரங்கள் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version