பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி நடந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் கடந்த சில மாதங்களாக வலுத்து வருவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் அரையிறுதிப் பெரும்பான்மையை கொண்டுள்ள அனுர அரசாங்கள் பிமல் – ஹரணி என இரு பிரிவுகளாக பிளவு பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த முரண்பாடுகள் காரணமாக அடுத்து வரும் மாதங்களில் பிரதமர் பதவியிலும் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் பிரபல்யமான உறுப்பினர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஜே.வி.பியின் பாரம்பரியத் தலைவர்கள் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவருக்கு நெருக்கமான எம்.பிகள் தொடர்பில் இவர்கள் அதிகளவான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி,
