Home இலங்கை அரசியல் யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்

யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்

0

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்ட
புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் (11) காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் பங்கேற்றுள்ளார்.

பாதுகாப்பு கெடுபிடிகள்

பிரதமர் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலய சூழலில்,
பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர்
குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டதோடு, ஆலயத்திற்கு வருகை
தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்தனர்.

எனினும் பலரும் விசனம் தெரிவித்த நிலையில் ஆலய தர்மகார்த்த முக்கியஸ்தர்களுடன் பேசியதை
அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version