Home இலங்கை சமூகம் கடையடைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ். மாநகர மேயர் கோரிக்கை

கடையடைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ். மாநகர மேயர் கோரிக்கை

0

நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழர் தாயகமாக வடக்கு – கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. 

இராணுவம் வெளியேற வேண்டும்

இதை எதிர்த்து தமிழர் தாயகத்தில் நாளை திங்கட்கிழமை பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எமது தமிழர் பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம், இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

NO COMMENTS

Exit mobile version