Home அமெரிக்கா அடிபணிய மறுத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் : ட்ரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை

அடிபணிய மறுத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் : ட்ரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை

0

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதுடன், பல மாற்றங்களை செய்ய வலியறுத்தியதையும் நிராகரித்துள்ளது.

 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி

இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது.

கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது.

மேலும், பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version