Home அமெரிக்கா மோசமான நபருடன் ட்ரம்பின் தொடர்பு.. சர்வதேச அரசியலில் கடும் விமர்சனம்

மோசமான நபருடன் ட்ரம்பின் தொடர்பு.. சர்வதேச அரசியலில் கடும் விமர்சனம்

0

மோசமான நபர் ஒருவருடன் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பைக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த இருநாட்களாக அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அரங்கில் பரவலாகப் பேசப்பட்டது.

முன்னணி சர்வதேச ஊடகங்களும் இந்த விடயம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

பாலியல் குற்றவாளி 

கடந்த காலங்களில் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் ட்ரம்ப் தொடர்புகளை வைத்துக் கொண்டதாக விமர்சிக்கப்படுகிறது.

எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த ஆவணங்கள் விரைவில் வெளியாகவுள்ளதாகத் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ட்ரம்ப் பதவி விலகவுள்ளதாகவும் சர்வதேச பரப்பில் பேசப்பட்டது.

எனினும் இதுகுறித்து எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. 

NO COMMENTS

Exit mobile version