இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்னவின் மனைவி அப்சாரி
திலகரத்ன, தற்போது விமான சேவையில் பணியாற்றவில்லை என்றாலும், ஸ்ரீலங்கன்
எயர்லைன்ஸின் சீருடையான புடவையை அணிந்து ஒரு வலைத்தளத்திற்கு அளித்த நேர்காணல்
காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
முன்னதாக ஏர்லங்கா என்ற பெயரில் அறியப்பட்ட தேசிய விமான சேவையில் விமானப்
பணிப்பெண்ணாக பணியாற்றிய அப்சாரி, அந்த சீருடையை அணிந்து கொடுத்த நேர்காணலில்
தோன்றியமைக் குறித்து விமான சேவை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சட்டரீதியான நடவடிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நிறுவனம் விட்டு விலகும் ஊழியர்கள், குறிப்பாக கேபின் குழுவினர், தங்கள்
சீருடைகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை திருப்பித் தர வேண்டும் என்பது
கட்டாயமாகும்.
இதனை மீறி சீருடையை அங்கீகரிக்கப்படாத வகையில் பயன்படுத்தியதற்காக, அப்சாரி
திலகரத்ன மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து விமான சேவை தற்போது
சட்ட ஆலோசனையை நாடிவருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
