Home இலங்கை சமூகம் மறுக்கப்படும் சுகாதார அமைச்சரின் தீர்மானங்கள்

மறுக்கப்படும் சுகாதார அமைச்சரின் தீர்மானங்கள்

0

சுகாதார அமைச்சரின் தீர்மானங்களை அமைச்சின் அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில் தொய்வை ஏற்படுத்துவதாக அரச வைத்தியர்களின் சங்கம் குற்றம்சாட்டுகின்றது.

நேற்று வைத்தியர்களின் இடமாற்றம் மற்றும் இதர காரணங்களை முன்கொண்டு நாடு முழுவதும் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் நேற்று மாலை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்ற காரணங்களை கருத்தில் கொண்டு போராட்டம் கைவிடப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றம் பெரும் சிக்கல் நிலையை உருவாக்கியுள்ளது.மேலும் வருடாந்த இடமாற்றம் செய்யப்படாமல் 10,000 வைத்தியர்கள் இருக்கின்றனர்.

அரச வைத்தியர்கள்

இவர்கள் சேவை செய்ய வேண்டிய வைத்தியசாலையில் இல்லை.இதனால் சில வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன என அரச வைத்தியர்கள் சங்கத்தின் பதில் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சங்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் பேதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் சுகாதார அமைச்சர் இணங்கிய விடயங்களை அமைச்சின் அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்குகின்றனர்.

நேற்று நாம்,அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் பல பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகள் பெறப்பட்ட நிலையில் அவற்றை செயற்படுத்தாமல் அரச வைத்தியர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி அவர்கள் நாட்டை விட்டு செல்லும் மனோபாவத்தை ஏற்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

NO COMMENTS

Exit mobile version