Home ஏனையவை வாழ்க்கைமுறை கோடை கால வெயிலை சமாளிக்க முடியவில்லையா! இதோ சில வழிமுறைகள்

கோடை கால வெயிலை சமாளிக்க முடியவில்லையா! இதோ சில வழிமுறைகள்

0

கோடை காலம் ஆரம்பமாகி வெயில் சுட்டெரிக்கின்றது.

எனவே, நம் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் அவசியமானதாகும்.

வெயிலிருந்து பாதுகாக்க தண்ணீர் குடித்தல், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை உண்ணுதல், மட்டுமன்றி கோடை காலத்தை சமாளிக்க இன்னும் சில வழிமுறைகள் உண்டு.

இந்த வெயிலில் வெளியே செல்லும் போது கறுப்பு நிற குடை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.வெளிர் நிற குடைகளை பயன்படுத்துவதால் வெப்பத்திலிருந்து சிறிது பாதுகாப்படையலாம்.

கொரியன் பெண்களை போல் க்ளாஸ் ஸ்கின் வேண்டுமா! இந்த பொருள் இருந்தா போதும்

சில வழிமுறைகள்

இந்த காலத்தில் வறண்ட சருமம் உள்ளவர்கள் அடிக்கடி குளித்தல் நல்லது. அதிலும் முக்கியமாக வியர்வை உலர்ந்த பின்பு குளித்தல் மிகவும் நல்லது.

கோடை காலத்தில் வெளியில் செல்பவர்களோ, வீட்டிலிருப்பவர்களோ கறுப்பு நிற உடைகளை தவிர்த்து வெளிர் நிற ஆடைகளை அணிவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து சிறிது தப்பிக்கலாம்.

இது தவிர,காலையில் பீட்ரூட் பானம் அருந்துவது உடலின் வறட்சியை தவிர்த்து உணவுகள் எளிதில் செரிமானமாவதற்கு உதவும்.

தினமும் உட்கொள்ளும் உணவில் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.

அதே போல உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மாதுளம், சாத்துக்குடி, பூவன்பழம், நேந்திரம் பழம், மலைப்பழம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை சாப்பிடுதல் நல்லது.

மேலும்,குளிர்சாதனப்பெட்டியில் வைத்த நீரை குடிப்பதைத் தவிர்ப்பதோடு, சோடா போன்ற குளிர் பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

அற்புத மூலிகையான வெள்ளைப் பூண்டு: இதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version