இந்தியாவின் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில்(amrita hospital in kochi) 50 இலங்கை சிறுவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளுவகையில், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் ரோட்டரி கிளப் ஒஃப் கொழும்பு மேற்குடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
ரோட்டரி குளோபல் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை நிபுணர்களால் தெரிவு செய்யப்பட்ட மருத்துவ அவசரத்தின் அடிப்படையில் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்
இந்த திட்டத்தில் இலங்கை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சியும் அடங்கும், அதே நேரத்தில் இந்திய நிபுணர்கள் பிறவி இதய நோய்க்கான ஆரம்பகால கண்டறிதல் திட்டங்களை மேற்கொள்வார்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 60 சிறுவர்களுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இது இரண்டாம் கட்ட செயற்பாடாகும்
