Home இலங்கை சமூகம் வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரத்திற்கு பிரியாவிடை! கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரத்திற்கு பிரியாவிடை! கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்

0

கண்டி தேசிய வைத்தியசாலையில் 18 வருடங்களாக சேவையில் இருந்த CT ஸ்கேன் இயந்திரத்திற்கு,  வைத்தியசாலை தரப்பினர் கண்கலங்கி பிரியாவிடை வழங்கியுள்ளனர். 

இந்த பிரியாவிடை நிகழ்வு நேற்றையதினம்(06) கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. 

இதன்போது, அங்கு குழுமியிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் CT ஸ்கேன் இயந்திரத்தின் மீது மலர்கள் வைத்து பிரியாவிடை வழங்கியதுடன், அங்கு உரையாற்றி வைத்தியர்கள் உள்ளிட்ட சிலர் கண் கலங்கி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

18 வருட  பயன்பாடு

18 வருடங்களாக, இலட்சக்கணக்கான நோயாளர்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய குறித்த CT ஸ்கேன் இயந்திரம், ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் தமது தொழில்சார் அறிவைப் பெறுவதற்கு உதவியுள்ளது.

  

2006ஆம் ஆண்டு கண்டி தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட  இந்த ஸ்கேன் இயந்திரம், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கண்டி தேசிய வைத்தியசாலையை நோக்கி வரும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளது. 

பல வருடங்களாக  இயங்கிய இந்த இயந்திரத்தை தற்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மரியாதையுடனான பிரியாவிடை வழங்குவதற்கு தாம் தீர்மானித்ததாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க நிபுணர் குறிப்பிட்டுள்ளார். 

இப்படி ஒரு சிறந்த இயந்திரத்தை இங்கிருந்து அகற்றும்போது, தமக்கு மாத்திரம் அல்லாமல் இந்த இயந்திரத்தின் சேவை அறிந்த, இங்கு பணியாற்றிய மற்றும் பணியாற்றும் அனைவருக்கும் வேதனையான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version