Home இலங்கை சமூகம் மக்களே அவதானம்! வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களே அவதானம்! வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இன்றைய வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று(29.04.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போதிய அளவு நீர் அருந்துதல்

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

இதேவேளை மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு நீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெட்ட வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலரையும் மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை

போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய நபருக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version