Home இலங்கை சமூகம் யாழில் வெள்ள அனர்த்தம் – அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்

யாழில் வெள்ள அனர்த்தம் – அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (28.11.2024) புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

“வெள்ளப் பாதிப்புக்குட்பட்டுள்ள பகுதிகளை நாம் நேரில் சென்று பாா்வையிட்டோம்.

வெள்ளப் பாதிப்பு

எதிர்வரும் காலங்களில் யாழ். மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில்
திட்டமிட்டு கணிசமான மாற்றங்களை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க
வேண்டும்.

மேலும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

இன்றைய நிலையில் யாழ். மாவட்டத்தை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்க அனைவரும்
ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்த நிலைமைகள்

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனும்,
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவும்
தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்
குறித்து விளக்கமளித்தனர்.

மேற்படி கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், யாழ். மாவட்ட பிரதம கணக்காளர்,
திட்டமிடல் பணிப்பாளர், பனை அபிவிருத்தி சபைத் தலைவர், முப்படைகளின்
அதிகாரிகள், துறைசாா் திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version