Home இலங்கை சமூகம் வவுனியாவில் கனமழை – வீதிகள் ஊடாக போக்குவரத்துக்கு தடை

வவுனியாவில் கனமழை – வீதிகள் ஊடாக போக்குவரத்துக்கு தடை

0

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று (27) மு.ப. 8.30 மணி முதல் இன்று (28) அதிகாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில். அதன் அளவு 315 மி.மீ என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதனால் வவுனியா, தாண்டிக்குளம் – கிடாச்சூரி வீதி தேவர்குளத்தின் நீர் வழிந்தோடுவதால் நீரில் மூழ்கியுள்ளது.

இப்பகுதியில் பயணிப்பவர்கள் பாதுகாப்பாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version