வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகின்ற காரணத்தால் அவதானத்துடன் இருக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் இன்று (15) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பலத்த காற்று காரணமாக
மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும் இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக மின்சார சபைக்கு அறிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மின்சார சபை தொலைபேசி இலக்கம்
அத்துடன் மின்சார சபை மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணுமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபை தொலைபேசி இலக்கம் 021 202 4444
அல்லது கீழ்வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
யாழ்ப்பாணம் 0212222609, திருநெல்வேலி கோண்டாவில் 0212222498, சுன்னாகம் 0212240301
சாவகச்சேரி 0212270040, பருத்தித்துறை 0212263257, வட்டுக்கோட்டை 0212250855, வேலணை 0212211525