Home இலங்கை அரசியல் நாட்டில் இன்று சில பகுதிகளில் ஓரளவு மழை பெய்யும்

நாட்டில் இன்று சில பகுதிகளில் ஓரளவு மழை பெய்யும்

0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23.09.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

வட மேல் மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை காணப்படும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை, மாத்தளை, மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் ஓரளவு பலத்த காற்று (40-45) வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.   

Source: https://ibctamil.com/article/heavy-rain-with-thunder-weather-in-sri-lanka-1727056611

NO COMMENTS

Exit mobile version