Home இலங்கை சமூகம் யாழில் மின்னல் தாக்கத்தினால் வீடு சேதம்

யாழில் மின்னல் தாக்கத்தினால் வீடு சேதம்

0

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யாழில் (Jaffna) ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று பகுதியளவில்
சேதமடைந்துள்ளது.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். 

மின்னல் தாக்கம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர்
பிரிவில் இந்த தாக்கம் இடம்பெற்றது.

இந்த மின்னல் தாக்கத்தினால் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version