Home அமெரிக்கா நியூயோர்க்கில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்! பலர் உயிரிழப்பு

நியூயோர்க்கில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்! பலர் உயிரிழப்பு

0

நியூயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது ஆறு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெரியவர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.

உறுதியான தகவல் இல்லை

எனினும், ஹெலிகொப்டருக்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பதை இன்னும் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நியூயோர்க் தீயணைப்புத் துறை, கடல் மற்றும் நில மீட்புப் பிரிவுகள் விபத்து நடந்த இடத்தில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version