Home ஏனையவை வாழ்க்கைமுறை செம்பருத்தி பூ – இலையை இப்படி பயன்படுத்தினால் முடி கொத்து கொத்தாக வளரும்!

செம்பருத்தி பூ – இலையை இப்படி பயன்படுத்தினால் முடி கொத்து கொத்தாக வளரும்!

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

🛑 தேவையான பொருட்கள்

  1. செம்பருத்தி இலை- 1
  2. செம்பருத்தி பூ- 2
  3. வெந்தயம்- 3 ஸ்பூன்
  4. அரிசி- 2 ஸ்பூன்
  5. பாசிப்பருப்பு – 4 ஸ்பூன்

🛑 பயன்படுத்தும் முறை  

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, வெந்தயம், அரிசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவரை சேர்த்து கலந்துகொள்ளவும்.
  2. பின் இந்த பொருட்கள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து தண்ணீர் வற்றியவுடன் ஆறவைத்துக் கொள்ளவும்.
  3. பின்னதாக இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  4. இதனை உச்சந்தலையிலிருந்து தலைமுடியின் நுனி வரை தடவி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளவும்.

  5. இந்த கலவையை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

Source: https://ibctamil.com/article/hibiscus-hair-mask-for-hair-growth-1775640233

NO COMMENTS

Exit mobile version