Home இலங்கை சமூகம் ராஜபக்ச ஆட்சிகால உயர் பெண் அதிகாரி ஒருவர் அதிரடி கைது!

ராஜபக்ச ஆட்சிகால உயர் பெண் அதிகாரி ஒருவர் அதிரடி கைது!

0

ராஜபக்ச ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய திறப்பு விழாவுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (SLLRDC) முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த கழகத்தின் முன்னாள் பொது மேலாளர் எம்.ஆர். ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு இழப்பு

வெரஸ்ஸ கங்கை திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழாவிற்காக கொள்முதல் நடைமுறைக்கு வெளியே ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த விழாவிற்காக திட்ட நிதியிலிருந்து ரூ. 2.76 பில்லியனை செலவழித்து, அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version